வரும் 14ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: புதிய இடம் அறிவிப்பு

செப்டம்பர் 14ஆம் தேதி சட்டசபை கூடுகிறது என்றும், இந்த முறை சட்டசபை வழக்கமான இடத்தில் நடைபெறாமல் புதிய இடத்தில் கூடுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சட்டசபை அரங்கில் சட்டசபையை கூட்டினால், பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது இதனை அடுத்து சட்டசபையின் அடுத்த கூட்டம் கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து சட்டசபை செயலாளர் சமீபத்தில் கலைவாணர் அரங்கை சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் சட்டசபையை தற்காலிகமாக
 

வரும் 14ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: புதிய இடம் அறிவிப்பு

செப்டம்பர் 14ஆம் தேதி சட்டசபை கூடுகிறது என்றும், இந்த முறை சட்டசபை வழக்கமான இடத்தில் நடைபெறாமல் புதிய இடத்தில் கூடுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சட்டசபை அரங்கில் சட்டசபையை கூட்டினால், பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது

இதனை அடுத்து சட்டசபையின் அடுத்த கூட்டம் கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து சட்டசபை செயலாளர் சமீபத்தில் கலைவாணர் அரங்கை சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் சட்டசபையை தற்காலிகமாக கலைவாணர் அரங்கில் கூட்ட முடிவு செய்யப்பட்டது

வரும் 14ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: புதிய இடம் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூடும் என்று சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்திற்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் வைரஸ் பாதிப்பு, நீட்தேர்வு, ஊரடங்கில் தளர்வு உள்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளதால் இந்த சட்டசபை கூட்டம் காரசாரமான விவாதங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web