அசாம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், மத்திய பிரதேசத்திலும் "அக்டோபர் 4ல் தேர்தல்"!!

அக்டோபர் 4ஆம் தேதி அசாம் மகாராஷ்டிரா மேற்கு வங்கம் மத்திய பிரதேசத்தில் உள்ள காலியான இடங்களுக்கும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
election

தற்போது சில முக்கிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வெளியிடுகிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது  மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதியினை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மீதமுள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நாலாம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முன்னதாக தமிழகத்தில்  3 இடங்கள் காலியாக இருந்த நிலையில் ஓரிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் எம்எம் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.election

மேலும் அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் ஆர் வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால் உருவான காலியிடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தேர்தலுக்கான அறிவிப்பாணை செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 27ஆம் தேதி என்றும் கூறியுள்ளது.

மேலும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ,மத்திய பிரதேசத்திலுள்ள காலியாக காணப்படுகின்ற இடங்களுக்கும் அக்டோபர் 4ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் உள்ளது.

From around the web