சைக்கிளில் வந்தது குறித்து அவரிடமே கேளுங்கள்! என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்!
 
சைக்கிளில் வந்தது குறித்து அவரிடமே கேளுங்கள்! என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது காலை தொடங்கியது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து மிகவும் பாதுகாப்பான முறையில் வரிசையில்  வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.

vijaysethupathi

வாக்காளர்களுக்கு பாதுகாப்பான விதமாக அவர்களுக்கு சனிடைசர் தெளிக்கப்பட்டு அவர்களுக்கு  முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்து பின்னர் அதிகாரிகள் அவர்களை வாக்களிக்க அனுமதிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் வேகமாக பதிவாகி வருகிறது. தமிழகத்தில் மதியம் ஒரு மணிவரை விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்ச வாக்கு பதிவானது பதிவாகியுள்ளது.

காலை முதலே பிரபலங்கள் பலரும் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். அதன் மத்தியில் நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறினார் நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன் என்றும் எப்பொழுதும் என நிலைபாடு அதுவே எனவும் அவர் கூறினார். மேலும் அவர் அவரிடம் விஜய் சைக்கிள் குறித்தான கேள்வி எழுப்பப்பட்டது ,அதற்காக விஜய் சைக்கிள் வந்தது குறித்து அவரிடமே கேழுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என செய்தவர்களுக்கு பதிலளித்தார். மேலும் காலையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web