அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: AICTE அதிரடி பதில்

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு ஒன்று கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த அறிவிப்பின்படி தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களின் அனைத்து பாடங்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு யுஜிசி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  மட்டுமின்றி இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியது. அண்ணா பல்கலைக்கழக வேந்தரும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார் 

இந்த நிலையில் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் AICTE சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது தரப்பு பதிலை அளித்துள்ளது. அதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு யுஜிசி விதிகளுக்குப் புறம்பானது என்றும் இறுதித் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றும் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் அளிக்கப்படும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இந்த வழக்கின் முடிவில் தான் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web