அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி உத்தரவு! அதிரும் டெல்லி!"முழு ஊரடங்கு"

டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது!
 
அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி உத்தரவு! அதிரும் டெல்லி!"முழு ஊரடங்கு"

கடந்தாண்டு தொடக்கத்தில்  இந்தியாவில் வந்து அதன் பின்னர் இந்தியாவின் பெருமுயற்சியால் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆட்கொல்லி நோயான கொரோனாநோய். இந்நோயானது கடந்த ஆண்டு தொடக்கத்தில் வந்ததும் இந்திய அரசின் முழு ஊரடங்கு திட்டத்தால் இந்நோயானது கடந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை கண்ட மற்ற நாடுகளும் தங்களது நாடுகளில் முழு ஊரடங்கு திட்டத்தையும் அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவில் மீண்டும் எழுந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

lockdown

மேலும் இந்தியாவில் குறிப்பாக உத்தர பிரதேசம் மகாராஷ்டிரம் டெல்லி தமிழ்நாடு போன்ற நாடுகளில் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் பல மாநிலங்களின் சார்பில் பல்வேறு திட்டங்களும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் நாளையதினம் முதல் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை  என்று அறிவித்தார். அதன்பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி நேற்றைய தினம் வரை டெல்லியில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் இன்று காலை முதலே டெல்லியில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவை அறிவித்துள்ளார். அதன்படி டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியதால் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆறு நாட்களில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை, மருந்துகள், ஆக்சிஜன் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் ஆறு நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்க வேண்டிய தேவை ஏற்படாது என்றும் நம்புவதாக அவர் கூறினார்.

From around the web