முதல்வர் வேட்பாளர் யார்? அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வியும் பாஜகவின் பதிலடியும்!

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும், ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல முடியுமா என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார் இந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள டெல்லி பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் புகைப்படத்தை பதிவு செய்து ’இந்த முகத்தை விட அழகான, திறமையான ஏராளமான நல்ல
 
முதல்வர் வேட்பாளர் யார்? அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வியும் பாஜகவின் பதிலடியும்!

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும், ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல முடியுமா என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்

இந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள டெல்லி பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் புகைப்படத்தை பதிவு செய்து ’இந்த முகத்தை விட அழகான, திறமையான ஏராளமான நல்ல முகங்கள் பாஜகவில் உள்ளன. அவர்களில் ஒருவரை பாஜக முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளது

அரவிந்த் கெஜ்ரிவால் கேட்ட கேள்வியும், பாஜக கொடுத்த பதிலடியும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web