தலைநகர் டெல்லியில் பள்ளிகள் விடுமுறை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் அனைத்து பள்ளிகளையும் மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு!
 
தலைநகர் டெல்லியில் பள்ளிகள் விடுமுறை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு!

மக்கள் மத்தியில் கண்ணுக்குத் தெரியாத தொந்தரவு தரும் நோயாக உள்ளது கொரோனா. கொரோனா வைரஸ் முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தாக்கம் தலைவிரித்தாடியது. மேலும் இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் ஆனது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வரத்தொடங்கியது. ஆனால் இந்திய அரசு எந்த ஒரு நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

delhi

மேலும் மற்ற நாடுகளுக்கும் இந்திய அரசானது முன்னோடியாக இருந்தது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். இதனால் இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தாக்கமானது குறைய தொடங்கியது. இந்தியாவின் சில வாரங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. இந்தியாவில் டெல்லி,  மகாராஷ்டிரம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கமானது அதிகமாக உள்ளது. மேலும் நேற்றைய தினம் தமிழக அரசு கட்டுப்பாடு விதிகளையும் தடைகளையும் விதித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும் அவர் மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார் அறிவித்துள்ளார் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் 35  மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த  மருத்துவமனையில்தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web