மதுரையில் 70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் நிச்சயம்!!

மதுரையில் 70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்போம் என்று தமிழக அரசு கூறியுள்ளது
 
library

தற்போது தமிழகத்தில் திமுக  ஆட்சி நடைபெறுகிறது. தற்போது முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின், திமுக  கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில் அவர்தான் தேர்தல் வாக்குறுதியாக கூறிய ஒவ்வொன்றாக வரிசையாக நிறைவேற்றி மக்கள் மனதில் நடந்த இடத்தை தக்க வைத்து வருகிறார் நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய முதல்வரின் தந்தையுமான மு கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.madurai

மேலும் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட 2000 ரூபாயும் இந்த மாதம் வழங்கப்படும் என்று நேற்றைய தினம் அறிக்கை வெளியாகி இருந்தது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் நிவாரண பொருட்கள் நிவாரணத் தொகையும் கொடுக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பம்சங்கள் பல்வேறு திட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தற்போது மதுரை மக்களுக்கு மற்றும் ஒரு இன்பமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி மதுரையில் கலைஞர் நினைவக நூலகம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் இந்த கலைஞர் நினைவு நூலகமானது 70 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது மேலும் இது இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக காணப்படுகிறது.

From around the web