ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு ரத்து!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசம் ஆகிறது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் பொருந்தும். அம்மாநில எல்லைகளை இனி கூட்டலாம். குறைக்கலாம். மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6
 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசம் ஆகிறது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

இதன்மூலம் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் பொருந்தும். அம்மாநில எல்லைகளை இனி கூட்டலாம். குறைக்கலாம். மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு ரத்து! சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டப்பிரிவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம் உடனடியாக சட்டமானது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கான அறிவிப்பு ஆணையை அமித் ஷா வெளியிட்டார். 


பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்றது. ஜம்மு, கிஸ்த்வார், ரேசாய், தோடா, உதம்பூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டிருக்கும் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 


காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


From around the web