அர்னாப் கோஸ்வாமி மீண்டும் கைதா? சுறுசுறுப்பாகி வரும் மும்பை போலீஸ்


 

 

கட்டிட பொறியாளர் ஒருவரின் தற்கொலை வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது என்பது தெரிந்ததே 

முன்னதாக மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் கிடைத்து உள்ளதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய மும்பை போலீசார் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

arnob

அர்னாப் கோஸ்சுவாமி அவர்களை கைது செய்யும் போது பெண் போலீசார் ஒருவரை அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி தாக்கியதாகவும் இதனை அடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது

பெண் போலீசார் தாக்குதல் வழக்கில் அர்னாப் கைது செய்யப்பட்டால் மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது  

From around the web