ராணுவ வீரரான கணவரும் மரணம்! மகளும் மனநிலை சரியில்லை!! "அதனால் தற்கொலை"

ஒரு தாய் தன் இரண்டு மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
ராணுவ வீரரான கணவரும் மரணம்! மகளும் மனநிலை சரியில்லை!! "அதனால் தற்கொலை"

தற்போது மக்கள் மத்தியில் ஒரு பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்றால் அவர்கள் முதலில் கையாளுவது தற்கொலையே. மேலும் இதை பல பிரபலங்களும் முயற்சித்து முன்னோடியாக இருக்க வேண்டிய அவர்களும் தங்களது உயிரினை பெரிதாக எண்ணாமல் பிரச்சினைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். அவரது ரசிகர்களுக்கும் நமது தலைவர் தற்கொலை செய்து கொள்கிறார் நாமும் செல்வோம் என முன்னோடியாக இருந்து அவர்களின் மரணத்திற்கும் காரணமாகின்றனர்.death

மேலும் சிறிய பிரச்சனை கூட தற்பொழுது ஒரே தீர்வு தற்கொலை என்ற எண்ணமே மக்கள் மனதில் அதிகமாக நிலவுகிறது. மேலும் பல குடும்ப பிரச்சினைகளும் தற்கொலையே அதிகமாக காணப்படுகிறது. இச்சம்பவம் மக்களை மிகவும் பதற வைக்கிறது. மேலும் ஒரு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரவுகிறது. மேலும் இச்சம்பவம் நம் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே உள்ள அழகாபுரியில் மகள்கள் இரண்டு பேருடன் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய் சோபனா, 2 மகள்கள் அபிராமி, சிவானி ஆகிய 3 பேரின் உடல்களை கைப்பற்றி தேவகோட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்சோபனாவின் கணவர் ராணுவ வீரரான அவர் இறந்த நிலையில் மூத்த மகளும் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பமே தற்போது இல்லை என்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பிரச்சனைக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதே உண்மையாக உள்ளது.

From around the web