அரியர் தேர்வு ரத்து விவகாரம்: தமிழக அரசு விளக்கம்!

மாணவர்களின் அரியர் அனைத்தும் ஆல்பாஸ் என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

மாணவர்களின் அரியர் அனைத்தும் ஆல்பாஸ் என்பது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இறுதி பருவ தேர்வைத்தான் ரத்து செய்யக்கூடாது என யுஜிசி கூறியுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது

முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய பாலகுருசாமி தரப்பு, ‘அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் இந்த அறிவிப்பு சோர்வடைய செய்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளதாகவும் வாதாடினர்

தேர்வில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைக்கும் என்றும், இதுகுறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு, ஏஐசிடிஇ, யுஜிசி ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

From around the web