அரியர் தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!

 

கடந்த சில நாட்களாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்த பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துர் இருப்பதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் அரிஅர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பதிவு செய்த வழக்கில் ஏஐடியுசி மற்றும் யுஜிசி ஆகியவைகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவைகள் மட்டுமின்றி மத்திய அரசும் இது தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது

அரியர் தேர்வு ரத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web