அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரியர் தேர்வுகளை ஆன்லைனில் 8 வாரத்திற்குள் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
 
அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவர்களின்  அரியர் தேர்வும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எனினும் மாணவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அரியர் தேர்வுகள் குறித்தான வழக்குகளும்  வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

high court

அதன்படி அரியர் தேர்வுகளை ஆன்லைனில் 8 வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலால் தடை செய்யப்பட்ட  அரியர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை உயர் நீதிமன்றம் ஏற்காததால் தமிழக அரசு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் அரியர்  அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது .

மேலும் முன்னதாக உயர் நீதிமன்றமோ அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவோ நேரடியாகவோ நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க கூடாது என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்வில் எழுதிய மாணவர்களுக்கும் விரைந்து சான்றிதழை வழங்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது மேலும் அரியர்  ஆன்லைனில் 8 வாரத்துக்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

From around the web