வீட்டில் தனிமையா இருக்கீங்களா? சொல்லுங்க "மூன்று வேளை உணவு ஃப்ரீ"!!!

சைதாப்பேட்டையில் தனிமைப்படுத்தப்வர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சுப்பிரமணியன்!
 
free food

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக பரவும் நோயாக ஆட்கொல்லி நோயனா கொரோனா காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்திலும் அரசு மிகுந்த கவலையில் உள்ளன. மேலும் நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் முக ஸ்டாலின். ஆட்சியில் அமரும் போது அவருக்கு சவாலாக இருக்க பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. ஆயினும் ஒவ்வொன்றையும் தனது திறம்பட திறமையினால் நிவர்த்தி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் தலைமையில் தமிழகத்தில் 3 வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன.subramanian

அதுவும் கடந்த இரண்டு வாரங்களை விட தற்போது உள்ள இந்த மூன்றாவது வாரம்  கடுமையான முறையில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. இதனால் வீடுகள் தேடி வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்கின்றனர்.இதனால் பொது மக்கள் கூடுவது குறைக்கப்பட்டதால் மட்டுமின்றி கொரோனா பரவலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் நோயாளிகளை நிரம்பி வருகின்றன. அதனால் தமிழகத்தில் உள்ள பலரும் தங்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இத்தகையவர்களுக்கு நம் தமிழகத்தின் அமைச்சராக உள்ள சுப்பிரமணியன் சில பயன் அளிக்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தொற்று பாதிப்பு வீட்டில் தனிமை இருப்பதற்கு மூன்று வேளை உணவும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனால் உணவின்றி தவிக்கும் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web