தமிழகத்தில் இலங்கையின் நிழலுலக தாதாக்கள் பதுங்கலா? இண்டர்போல் எச்சரிக்கை

 

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக  தமிழக போலீசாருக்கு இன்டர்போல்"ரெட் அலர்ட் செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் நுழையும் தீவிரவாதிகள் பலர் இலங்கையிலிருந்து கடல்வழி மூலமாகத்தான் வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கையின் 10 நிழலுலக தாத்தாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக இண்டர்போல் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது

தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி‌ 
பொன்சேகா கைது  செய்யப்பட்டார் என்பதும், ஏற்கனவே மற்றொரு நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா' தமிழகத்தில் உயிரிழந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இண்டர்போல் தெரிவித்துள்ளதால் தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web