தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? முதல்வர் நாளை அறிவிப்பு!

 
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? முதல்வர் நாளை அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் நவம்பர் 16-ஆம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது 

இருப்பினும் பள்ளிகள் திறப்பதற்கு திமுக உள்பட ஒருசில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து நேற்று அனைத்து தலைமை ஆசிரியர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் 

edappadi

இந்த ஆலோசனை குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் இதனை அடுத்து வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

எனவே நாளைய முதல்வரின் அறிவிப்பை பொருத்தே, தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web