தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப் படுகிறதா? பரபரப்பு தகவல் 

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் முரண்பட்ட முறையில் நடத்தப்படுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப்படலாம் என்ற செய்தி கசிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

 

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் முரண்பட்ட முறையில் நடத்தப்படுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப்படலாம் என்ற செய்தி கசிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதில் பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு வீட்டில் மூன்று மாணவர்கள் இருந்தால் 3 செல்போன்கள் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு செல்போன் மட்டுமே இருக்கும் வீடுகளில் பிரச்சினை ஏற்படுவதாகவும் சமீபத்தில் இது சம்பந்தமான பிரச்சினையில் ஒரு மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

மேலும் ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என்றும் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்புகள் பெரும் முரண்பட்ட முறையில் இருப்பதாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது

மேலும் எதிர்க்கட்சிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தற்போது ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள பாமகவும் ஆன்லைன் வகுப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்றும் ஆன்லைன் கல்வி முறை மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார் 

எதிர்க் கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆன்லைன் வகுப்பு தடை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 

From around the web