ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களா? பரபரப்பு தகவல் 

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் 46வது அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பவர் ஜோபைடன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஜோ பைடன் வெற்றிக்கு இந்திய பிரதமர் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஜோ பைடன் முன்னோர்கள் சென்னையில் வாழ்ந்ததாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோபைடன் முன்னோர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் மற்றும் வில்லியம் பைடன் ஆகிய இருவரும் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக சென்னையில் வாழ்ந்து உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது 

கிறிஸ்டோபரின் வழி வந்தவர் தான் ஜோபைடன் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் இவர்களின் முன்னோர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் ஜோபைடனுக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே அமெரிக்க துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே தமிழகத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web