தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தலா? சிக்கிய 150 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்களா?

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே சிக்கிய 150 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது
 
afghan

தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் மிக முக்கிய செய்தியாக காணப்படுகிறது ஆப்கானிஸ்தானை  தாலிபன்கள் கைவசம் படுத்தியது. மேலும் இதனால் பல நாட்டுகளும் தங்களது மக்களை மீட்பதற்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  மேலும் அங்கு வாழ்கின்ற ஆப்கானிஸ்தான் மக்கள் கூட பெரும் இன்னலைத் அனுபவிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் தற்போது இந்தியர்களுக்கு பெரும் பிரச்சனையை தாலிபன்கள் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.kabul

அதன்படி ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே சிக்கிய 150 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் தாலிபன்கள் பிடிக்கபட்ட  இந்தியர்கள் பலரும் தாக்கப்பட்டதாக ஆப்கான் ஊடகங்கள் தகவல் அளித்துள்ளது. மேலும் காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்தபோது தாலிபன்கள் இந்தியர்கள் கடத்தல் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம் இருந்தாலும் செல்லும் வழியில் தாலிபன்கள் அச்சுறுத்தல் நடைபெற்றுள்ளது.

 காபூல் விமான நிலையம் சென்ற அப்பாவி இந்தியர்களை மத்திய சிறையில் அடைக்க பட்டதாகவும் தகவல். பிடிபட்ட இந்தியர்களை தாக்கி சித்திரவதை செய்து ஊடகங்கள் தகவல் கிடைத்துள்ளது. தாலிபன்களால்  சுற்றி வளைக்கப்பட்ட சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை தக்கிஸ் நகருக்கு கடத்தப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆனால் தாலிபன்கள் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

From around the web