ஹோட்டல்களில் உணவு விலை உயர்கிறதா? ஓட்டல் உரிமையாளர் சங்கம் விளக்கம்!!

இந்தியாவில் பல மாதங்களாக வீழ்ச்சியினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தினை தலைதூக்கி நிறுத்த 5 வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சீரியல் படப்பிடிப்புகள் நடத்துதல், ஹோட்டல்களை இயக்குதல், அரசு அலுவலகங்கள் சில இயங்குதல், வழிபாட்டுத் தலங்கள் செயல்படுதல், பேருந்து செயல்படுதல் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை (ஜூன் 8 ஆம் தேதி) முதல் தமிழகத்தில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளை நிச்சயம் கட்டாயம் கடைபிடிக்க
 
ஹோட்டல்களில் உணவு விலை உயர்கிறதா? ஓட்டல் உரிமையாளர் சங்கம் விளக்கம்!!

இந்தியாவில் பல மாதங்களாக வீழ்ச்சியினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தினை தலைதூக்கி நிறுத்த 5 வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் சீரியல் படப்பிடிப்புகள் நடத்துதல், ஹோட்டல்களை இயக்குதல், அரசு அலுவலகங்கள் சில இயங்குதல், வழிபாட்டுத் தலங்கள் செயல்படுதல், பேருந்து செயல்படுதல் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நாளை (ஜூன் 8 ஆம் தேதி) முதல் தமிழகத்தில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளை நிச்சயம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஹோட்டல்களில் உணவு விலை உயர்கிறதா?  ஓட்டல் உரிமையாளர் சங்கம் விளக்கம்!!

மேலும் நிபந்தனையில் ஒன்றான 50% பேர் மட்டுமே ஒரு நேரத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதால், உணவுக் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பொதுமக்கள் தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

ஓட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘தமிழகம் முழுவதும் நாளை முதல் உணவகங்களில் வழக்கம்போல் அமர்ந்து சாப்பிடலாம், கட்டாயம் பொதுமக்களும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் விலை உயருமா என்பது குறித்து யாரும் எவ்வித சந்தேகம் கொள்ள வேண்டாம்.

ஊரடங்கிற்கு முந்தைய கட்டணமே இனியும் தொடரும். உணவு கட்டணம் என்பது குறித்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், அது வதந்தியே” என்று தெரிவித்துள்ளது.

From around the web