நவம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறதா?

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. சமீபத்தில் ஆந்திரா உட்பட ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மற்ற மாநிலங்களிலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் தற்போது நவம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் மற்ற வகுப்புகள் படிப்படியாக தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது 

மேலும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கல்லூரியிலும் கிருமி நாசினிகள் வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

From around the web