"தாமரைக்கேணியில் காவல்நிலையம்" நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும்!!

நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை செய்வதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் கூறியுள்ளது
 
thamaraikeni

தற்போது நம் இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர், மேலும் அந்த பகுதிகளில் பல  வீடுகள் கட்டப்பட்டு காணப்படுகிறது.  குறிப்பாக நம் தமிழகத்திலும் கூட பல பகுதிகளில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் ஆதாரத்தை அளிக்கும் நிலையில் காணப்படுகிறது.police station

இது குறித்து தற்போது ஹை கோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மஞ்சேரி  தாமரை கேணியில் காவல்நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறிவிட்டனர், மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்ட தான் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஹை கோர்ட் கூறியுள்ளது.இதனால் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் என்றும் அந்தப் பகுதியில் காவல் நிலையம் கட்டப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web