எதற்கும் பயன்படாத ஆட்சியை விரட்டி அடிக்கின்ற நாள்தான் ஏப்ரல் 6! பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின்!

தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கரூரில் தேர்தல் பரப்புரை!
 
எதற்கும் பயன்படாத ஆட்சியை விரட்டி அடிக்கின்ற நாள்தான் ஏப்ரல் 6! பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  பல கட்சிகளும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.  ஆளும் கட்சியான அதிமுக- பாஜக- பாமக கட்சியையும் கூட்டணி வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்துள்ளது. மேலும் திமுக தரப்பில் முக ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்பு மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.

stalin

இந்நிலையில் அவர் தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  இவர் தற்போது கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் கரூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் கூறினார், பொய்யான விளம்பரங்களை கொடுத்து மக்களை அதிமுக ஏமாற்றுகிறது எனவும் அவர் கூறினார்.

மேலும் எதற்கும் பயன்படாத ஆட்சி எடப்பாடி ஆட்சி எனவும்  கூறினார். மேலும் அவர் எதற்கும் பயன்படாத ஆட்சியை விரட்டி அடிக்கின்ற நாள்தான் ஏப்ரல் 6 ஸ்டாலின் பேசினார்.எந்தத் திட்டத்தில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அங்கெல்லாம் அதிமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்றனர் எனவும் பிரச்சாரத்தில் அவர் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடக்கிறது எனவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் ஒரு மோசமான ஆட்சியை பழனிச்சாமி தலைமையில் அதிமுக நடத்துவது எனவும் குற்றசாட்டு வைத்தார். மேலும் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு மிகப் பெரிய துரோகம் செய்தார் எனவும் பிரச்சாரத்தில் அவர் கூறினார். விஷத்தை விடக்கூடியது துரோகம் தான்எனவும்  ஸ்டாலின் கருத்து கூறினார்.

From around the web