"அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்"-உதயநிதி நியமனம்!!

அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
 
udhyanithi

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். மேலும் இவர் தற்போதைய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகன் ஆவார். மேலும் வேறு பல்வேறு முன்னணி கதாநாயககளுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில்  கடந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக அவர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி அவர் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் சட்டமன்ற வேட்பாளராக திமுக கட்சி சார்பில் களம் இறங்கினார்.anna university

மேலும் அபாரமாக வெற்றி பெற்று  தற்போது சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு தற்போது மேலும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

மேலும் அலுவல் சாரா உறுப்பினராக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தகவல் அளித்துள்ளார். இதனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆன பின்னர் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

From around the web