இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம்;

இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
university

தற்போது உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காரணம் என்னவெனில் தமிழகத்தில் தற்போது வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளன இதனால் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போதுவரை மூடப்பட்டுள்ளன. மேலும் பல தொழில் நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன இதனால் பலரும் வேலை வாய்ப்பின்றி வீட்டில் தவித்து வருகின்றனர். இந்த காலகட்டத்திலும் பல மாணவர்களுக்கு கல்வி மற்றும் கல்லூரியின் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது மேலும் அதில் அதிக அளவு கட்டணம் வசூல் செய்ததாகவும் அப்போது புகார் எழுந்து வருகின்றன.madres

மேலும் சில நாட்களுக்கு முன்பாக சென்னை பல்கலைக் கழகமானது திருக்குறள் பாடத்தைத் கட்டாயப்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தது .மேலும்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இவை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது இந்நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகம் மேலும் ஒரு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை அறிவித்துள்ளது அதன்படி இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளிலும் பயில விரும்புவோர் அதற்கான இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஆதரவற்றவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆண்டு வருமானம் மூன்று லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

From around the web