மீண்டும் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை: அன்வர்ராஜா எம்பி பேச்சால் பரபரப்பு

அதிமுகவில் கடந்த சில நாட்களாக முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது தெரிந்ததே. முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்யப்படுவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களும், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் எழுப்பக் கூடாது என்றும் ஒற்றுமையுடன் கட்சியை செயல்படுத்த
 
மீண்டும் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை: அன்வர்ராஜா எம்பி பேச்சால் பரபரப்பு

அதிமுகவில் கடந்த சில நாட்களாக முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது தெரிந்ததே. முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்யப்படுவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களும், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் எழுப்பக் கூடாது என்றும் ஒற்றுமையுடன் கட்சியை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்

இதனை அடுப்பில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதிமுக எம்பி அன்வர்ராஜா பரமக்குடியில் நடந்த கூட்டமொன்றில் பேசிய போது ’கடந்த காலங்களில் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமல் அதிமுக போட்டி விட்டது உண்மைதான். ஆனால் வரும் தேர்தலில் அந்த நிலைமை நீடிக்காது

2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திவிட்டுத்தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று கூறியுள்ளார். கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி அதிமுக எம்பி அன்வர் ராஜா முதல்வர் வேட்பாளர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web