மகாராஷ்டிராவிலும் ‘இந்தி எதிர்ப்பு’: பரபரப்பு தகவல்

 

 

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடந்து பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலத்தில் இந்திக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது என்பதும் ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்ட் உலக அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹிந்திக்கு எதிரான தமிழர்களின் குரல் தற்போது அண்டை மாநிலங்களை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள இந்தி பேசும் பல மாநிலங்களிலும் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

குறிப்பாக கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் இந்திக்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. அங்கு இருக்கும் ஹிந்தி பதாகைகள் தார் வைத்து அழிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் தற்போது ஹிந்தி மொழியை பெரும்பாலும் பேசும் மக்களைக் கொண்ட மகாராஷ்டிராவிலும் இந்திக்கு எதிராக குரல் வலுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மட்டும் போதும் என்றும் இனி இந்தி வேண்டாம் என்றும் அம்மாநில மக்கள் திடீரென குரல் கொடுப்பதோடு, ஹிந்தி மொழியில் உள்ள பெயர் பலகைகளையும் அழித்து வருகின்றனர் இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web