மகாராஷ்டிராவுக்கு வந்த மற்றொரு சோதனை… படையெடுக்கும் லட்சக்கணக்கிலான வெட்டுக்கிளிகள்!!

சீனாவினைத் தாண்டி இத்தாலியில் படு வேகமாகப் பரவிய வைரஸ், உலகம் முழுவதிலும் 56 லட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. அந்தவகையில் உலக சுகாதார மையம் கொரோனாத் தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தினைப் பெற்றுள்ளது. அதிலும் இந்தியாவில் அதிக பாதிப்பினைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகின்றது. இந்தியாவில் 40 சதவீத அளவு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது மகாராஷ்டிராவிலே உள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவினை நோக்கி மற்றொரு
 
மகாராஷ்டிராவுக்கு வந்த மற்றொரு சோதனை… படையெடுக்கும் லட்சக்கணக்கிலான வெட்டுக்கிளிகள்!!

சீனாவினைத் தாண்டி இத்தாலியில் படு வேகமாகப் பரவிய வைரஸ், உலகம் முழுவதிலும் 56 லட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது.

அந்தவகையில் உலக சுகாதார மையம் கொரோனாத் தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தினைப் பெற்றுள்ளது. அதிலும் இந்தியாவில் அதிக பாதிப்பினைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகின்றது.

இந்தியாவில் 40 சதவீத அளவு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது மகாராஷ்டிராவிலே உள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவினை நோக்கி மற்றொரு பிரச்சினை படையெடுத்து வருகிறது.

அதாவது இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயிர்களை தின்று சேதம் விளைவித்து வருகின்றது வெட்டுக்கிளிகள். 

மகாராஷ்டிராவுக்கு வந்த மற்றொரு சோதனை… படையெடுக்கும் லட்சக்கணக்கிலான வெட்டுக்கிளிகள்!!

இந்தநிலையில், இந்த 3 மாநிலங்களைத் தாண்டி மகாராஷ்டிராவில் வெட்டுக்கிளிகள் உட்புகுந்து தங்களது வேலையினைக் காண்பித்து வருகின்றன. அதாவது நேற்றுமுன்தினம் பண்டாரா மாவட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் புகுந்து விட்டன.

தற்போத் பண்டாராவைத் தாண்டி மொஹாடி தாலுகா மற்றும் தும்சர் தாலுகாவில் உள்ள தேமானி கிராமம் போன்ற இடங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உள்நுழைய தீயணைப்பு படை வீரர்கள் பூச்சி கொல்லி மருந்துகள் அடித்து ஓரளவு நிலைமையினைக் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் மகாராஷ்டிராவினை நோக்கி பல லட்சக்கணக்கிலான வெட்டுக்கிளிகள் படையெடுக்கலாம் என்றும், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மகாராஷ்டிரா வேளாண் துறை தயாராக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web