தோல்வியின் மத்தியில் மற்றொரு அதிர்ச்சி!காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து  விலகல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!
 
தோல்வியின் மத்தியில் மற்றொரு அதிர்ச்சி!காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!

இந்தியாவில் கோடை காலம் ஆரம்பித்து விட்டால் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தொடங்கிவிடும். இதனால் மக்கள் கோடை காலத்தை மிகவும் அச்சத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த கோடை காலத்திலும் ஒரு தரப்பினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் .அவர்கள் யாரென்றால் கிரிக்கெட் விரும்பிகள். மேலும் இந்த கோடைகாலம் தொடங்கினால்  ஐபிஎல் திருவிழாவும் தொடங்கிவிடும். இதனால் அவர்கள் தங்களது வேலையை வேகமாக முடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஐபிஎல் போட்டிகளை கண்டு மகிழ்வர்.

ben stocks

கடந்த முறை கொரோனா காரணமாக ஐபிஎல்  ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது, ஆனால் இந்த முறை கொரோனா இருப்பினும் ஐபிஎல் போட்டி  இந்திய நாட்டில் நடைபெறுகிறது. ஆயினும் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மைதானங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்த ஐபிஎல் போட்டியை கடந்த தினங்களில் முன்பாக தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டனர். பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

சில தினங்கள் முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டு ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. ஆயினும் இறுதிவரை போராடியது என்றும் குறிப்பிட தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மற்றுமோர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் விரலில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த காயம் ஆனதே விரலில் எலும்பு முறிவாக மாறியதால் அவர் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .இதனால் ராஜஸ்தான் அணியினர் அவருக்கு பதிலாக வேறொரு வெளிநாட்டு பிளேயரை களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது அவர்களது அணிக்கு பெரும் இழப்பாக வரும் போட்டிகளில் இருக்குமென பேசப்பட்டு வருகிறது.

From around the web