மதுவை அடுத்து கொடுக்காப்புளி: கொரோனா குறித்து மற்றொரு வதந்தி

மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற வதந்தி உலகம் முழுவதும் பரவியதை அடுத்து ஈரானில் கள்ளச் சாராயம் குடித்து 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மது அருந்தினால் கொரோனா நோய் தாக்காது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தது இந்த நிலையில் மதுவை அடுத்து தற்போது கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா
 
மதுவை அடுத்து கொடுக்காப்புளி: கொரோனா குறித்து மற்றொரு வதந்தி

மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற வதந்தி உலகம் முழுவதும் பரவியதை அடுத்து ஈரானில் கள்ளச் சாராயம் குடித்து 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மது அருந்தினால் கொரோனா நோய் தாக்காது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில் மதுவை அடுத்து தற்போது கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா தாக்காதுஎன ஒரு தகவல் திடீரெனக் கிளம்பி உள்ளது. இந்த தகவலை புதுவை மாநிலத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமிக்காக, தான் வெற்றி பெற்ற தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான்குமார் என்பவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புதுவை அரசின் சார்பில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட ஜான்குமார் பேசியபோது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க நம்முடைய நாட்டிலேயே எளிய வழிமுறைகள் உள்ளன. நெல்லிக்காய் அல்லது கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனோ வராது. அதேபோல் வெங்காயம் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது என்றும், பழைய சோறு, பழவகைகள் தினமும் சாப்பிட்டால் கொரோனா மட்டும் இல்லை மரணம் கூட வராது என்றும் ஜான்குமார் கூறியுள்ளார்

மேலும் காலையில் அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் வெயிலில் நின்றாலே போதும் கொரோனா வைரஸ் நம் பக்கம் கூட வராது என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களை திணறி வரும் நிலையில் ஆளாளுக்கு கொரோனா வைரஸ்க்கு மருந்துகள் கூறிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web