சசிகலாவின் மேலும் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: பரபரப்பு தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சொந்தமான ரூபாய் 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் திடீரென மூடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் சசிகலா விடுதலை ஆவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா
 

சசிகலாவின் மேலும் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: பரபரப்பு தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சொந்தமான ரூபாய் 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் திடீரென மூடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஜனவரி மாதம் முதல் சசிகலா விடுதலை ஆவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்

இந்த சோதனையில் ரூபாய் 1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மேலும் ரூபாய் 300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாகவும் இதனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது

From around the web