கொரோனாவுக்கு பலியான இன்னொரு எம்பி: அதிர்ச்சி தகவல்

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொரோனாவில் இருந்து குணமாகிய போதிலும், துணை நோய்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்பி பலியாகி உள்ள தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி பள்ளி தூர்கா பிரசாத் ராவ் கொரோனாவால் மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆந்திராவின் ஆளும் கட்சியின் எம்பியான இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார். திருப்பதி தொகுதி எம்பி பள்ளி தூர்கா பிரசாத் ராவ் கொரோனாவால் மரணம் அடைந்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி பள்ளி தூர்கா பிரசாத் ராவ் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளது குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web