24 மணி நேரத்தில் உயிரை குடிக்கும் பிளேக்: சீனாவுக்கு வந்த அடுத்த ஆபத்து

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவி ஒரு கோடி மக்களுக்கும் மேலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது சீனாவில் பிளேக் என்ற கொடிய நோய் ஆரம்பித்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது சீனாவின் மங்கோலியா மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயது சகோதரர்களுக்கு பிளேக் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சையில்
 
24 மணி நேரத்தில் உயிரை குடிக்கும் பிளேக்: சீனாவுக்கு வந்த அடுத்த ஆபத்து

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவி ஒரு கோடி மக்களுக்கும் மேலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது சீனாவில் பிளேக் என்ற கொடிய நோய் ஆரம்பித்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

சீனாவின் மங்கோலியா மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயது சகோதரர்களுக்கு பிளேக் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் மர்மோத் என்ற விலங்கின் கறியை சாப்பிட்டதால் இந்த நோய் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

இதனை அடுத்து அந்த பகுதி முழுவதும் பிளேக் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் மர்மோத் என்ற கறியை சாப்பிட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த பிளேக் நோய்க்கு உடனடியாக மருத்துவம் செய்யாவிட்டால் 24 மணி நேரத்தில் இந்த நோய் தாக்கிய மனிதர் இறந்து விடுவார் என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் மனிதர்கள் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்புகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பிளேக் பரவினால் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்ற அச்சம் காரணமாக தற்போது சீனா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதுமே அச்சமடைந்துள்ளன

இதுகுறித்து சீன சுகாதாரத்துறை அதிகாரி கூறியபோது ’மனிதர்களை இந்த நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

From around the web