இன்னொரு ஊரடங்கு மக்களால் தாங்க முடியாது-மு க ஸ்டாலின்!

மே 2 க்கு பின் இன்னொரு ஊரடங்கு மக்களால் தாங்க முடியாது என்று கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்!
 
இன்னொரு ஊரடங்கு மக்களால் தாங்க முடியாது-மு க ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில தினங்கள் முன்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மிகவும் பலமான வலிமையான தொன்மையான கட்சியாக உள்ளது திமுகதிமுக சார்பில் அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வானது பல்வேறு கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது. திமுக கட்சியானது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மதிமுக போன்ற கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.stalin

மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது .மேலும் ஞாயிற்றுக்கிழமைகள்  மட்டும் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன.  எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தற்போது சில கருத்துக்களை கூறியுள்ளார். அதன்படி மே 2க்கு பின் இன்னொரு ஊரடங்குகளை மக்களால் தாங்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு தாங்கும் நிலையில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் இல்லை என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

காபந்து சர்க்கார் இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தடுத்திட அதிகாரிகள் தீவிர பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவின்  தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்ற செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் மே 2 ஆம் தேதி என்று கூற காரணம் என்னவென்றால் நீ இரண்டாம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டதால் அதனால்தான் அவர் குறிப்பிட்டு மே இரண்டாம் தேதியை கூறுகிறார் என்ற சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

From around the web