"எஸ்பிஐ ஏடிஎம்" கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் டெல்லியில் கைது!

சில தினங்களாக எஸ்பிஐ ஏடிஎம்  கைவரிசை பார்த்த கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைது
 
sbi

தற்போது இந்தியாவில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .இவை நம் நாட்டிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் படித்த இளைஞர்களுக்கு போதிய அளவு வேலைவாய்ப்பு இந்தியாவில் இல்லை என்பது உண்மையாக உள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் கொள்ளையடிக்கும் சம்பவத்திற்கு தங்களது படிப்பறிவை பயன்படுத்துகின்றனர் இது நாட்டுக்கு மிகவும் பாதிப்பை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது .மேலும் அவர்கள் நூதன முறையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு அவற்றை பலமுறை எடுத்துச் செல்கின்றனர்.kaithu

இந்நிலையில் சென்னையில் சில தினங்களாக எஸ்பிஐ ஏடிஎம் களை குறிவைத்து கொள்ளையர்கள் பலரும் கைவரிசை காட்டினார்கள். மேலும் அவர்கள் பல லட்சம் மதிப்பிலான பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர். மேலும் அவர்களில் முதலில் அமீர் என்பவரை ஹரியானாவில் தனிப்படை காவலர் பிடித்தனர். அதன் பின்னர் அவர் சில வாக்குமூலங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை அடித்தவர் பிடிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹரியானாவில் மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் டெல்லியில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார் ஏற்கனவே தான் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அவரது நண்பர் வீரேந்தர் சிக்கினார்.மேலும் சென்னையில் அறை எடுத்து தங்கி ஏடிஎம் கொள்ளை அரங்கேற்றிய தாக அமீர் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web