"மாநிலங்களவைத் தேர்தல்": 2 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ள இரண்டு திமுக வேட்பாளர்கள் அறிவிக்க பட்டுள்ளனர்
 
kanimozhi

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி தமிழகத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடித்துள்ளது திமுக. மேலும் நம் தமிழகத்தில் எம்பிக்களும் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இந்த நிலையில் அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாக உள்ளனர். அவர்கள் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அவை அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.dmk

இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுக தனது மாநிலங்களை காண இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி இதனை திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி மறைந்த மூத்த தலைவர் சோமு மகள் டாக்டர் கனிமொழி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தியாகராயர் நகர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் இந்த கனிமொழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய அக்டோபர் 4ஆம் தேதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளதால் மாநிலங்களவையில் திமுக பலம்  உயர்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது திருச்சி சிவா, இளங்கோவன் ,ஆர் எஸ் பாரதி, அந்தியூர் செல்வராஜ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும்  இளங்கோ, வில்சன், சண்முகம் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் அண்மையில் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் மாநிலங்களவையில் திமுகவிற்கு மேலும் பலம் கூட வாய்ப்பு உள்ளதாக  எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web