சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறு தேர்வுகளுக்கான முடிவு தேதி அறிவிப்பு

 

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடந்த நிலையில் இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியானது

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 28 வரையிலும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 வரையிலும் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த மறுதேர்வை எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறு தேர்வுகளுக்கான முடிவுகள் அக்.10ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு செய்துள்ளது

From around the web