டெல்லி மேல்சபை எம்பி ஆகிறார் அண்ணாமலை: பாஜக அதிரடி

பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில வாரங்களாக திரையுலகினர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து வந்த நிலையில் திடீரென முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் அண்ணாமலை அவர்களும் சேர்ந்தார்

 


பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில வாரங்களாக திரையுலகினர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து வந்த நிலையில் திடீரென முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் அண்ணாமலை அவர்களும் சேர்ந்தார்

மேலும் அவர் பாஜகவில் சேர்ந்த ஒரு சில நாட்களில் அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது அவர் விரைவில் மேல்சபை எம்பி ஆகப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேர்மையான துணிச்சலான அதிகாரி என்று பெயர் எடுத்த அண்ணாமலை பாஜகவில் இணைந்ததால் தமிழகத்தில் பாஜக வலுப்பெற்றதாக பிரதமர் மோடி கருதுகிறார் என்றும், இதனையடுத்து அவருக்கு எம்பி பதவி கொடுத்து அழகு பார்க்க பிரதமர் முடிவு செய்துவிட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

தமிழகத்தில் பாஜகவை எப்படியாவது வலுப்பெற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க பாஜக முடிவு செய்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றுதான் அண்ணாமலைக்கு கொடுக்க இருக்கும் எம்பி பதவி என்றும் கூறப்படுகிறது

From around the web