பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலைக்கு புதிய பதவி: பரபரப்பு தகவல்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் ரஜினிக்கு மிக நெருங்கிய நண்பருமான அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. பாஜகவில் இணைந்து உடன் அவர் அளித்த பேட்டியில் ’பாஜகவை தமிழகத்தில் பெரிய கட்சியாக மாற்றுவேன் என்றும் சட்டமன்றத்திற்குள் பாஜக உறுப்பினர்கள் செல்லும் வகையில் பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார் மேலும் தன்னை பற்றி வரும் விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்ட அண்ணாமலை இதுகுறித்து தான் செவிசாய்க்க போவதில்லை என்றும் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு டுவிட்டரில் டுவிட் செய்பவர்கலுக்கு எல்லாம் நான் பதில்
 

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலைக்கு புதிய பதவி: பரபரப்பு தகவல்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் ரஜினிக்கு மிக நெருங்கிய நண்பருமான அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. பாஜகவில் இணைந்து உடன் அவர் அளித்த பேட்டியில் ’பாஜகவை தமிழகத்தில் பெரிய கட்சியாக மாற்றுவேன் என்றும் சட்டமன்றத்திற்குள் பாஜக உறுப்பினர்கள் செல்லும் வகையில் பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்

மேலும் தன்னை பற்றி வரும் விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்ட அண்ணாமலை இதுகுறித்து தான் செவிசாய்க்க போவதில்லை என்றும் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு டுவிட்டரில் டுவிட் செய்பவர்கலுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாஜகவில் இணைந்ததால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்ததாக பாஜகவினர்களால் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது தமிழக பாஜகவின் துணை தலைவர் பதவி அண்ணாமலை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விபி துரைசாமி அவர்களுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்து அண்ணாமலைக்கும் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்களின் உதவியோடு துணைத்தலைவர் பதவி பெற்றுள்ள அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை ஒரு பெரிய கட்சியாக மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web