பெரியாரை தொடர்ந்து அண்ணா மற்றும் காமராஜர் சாலை பெயர் மாற்றம்!

நெடுஞ்சாலை இணையதளத்தில் அண்ணா சாலை காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை என்று திராவிடர் கழகம் கண்டனம்!
 
பெரியாரை தொடர்ந்து அண்ணா மற்றும் காமராஜர் சாலை பெயர் மாற்றம்!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட சாலைகளும் ஒவ்வொரு கிராமங்களிலும் குறுகிய கிராம சாலைகளும் உள்ளன. மேலும் இந்தியாவின் வடக்கே காஷ்மீர் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்றைய தினம் சென்னை ரிப்பன்  சாலையில் பெரியார் பெயர் மாற்றப்பட்டது. அதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

road

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை தினம் மாற்றப்பட்ட பெயரில் மீது கருப்பு மை பூசப்பட்டு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சாலை விவகாரத்தில் அநீதி நடைபெறுவதாக தகவல் வெளியானது.பெரியாரை தொடர்ந்து தற்போது அண்ணா மற்றும் காமராஜர் சாலைகளும் பெயர் மாற்றப்பட்டதாக தகவல்  வெளியானது. மேலும் இதற்கு திராவிடர் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

நெடுஞ்சாலை இணையதளத்தில் அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயர்கள் மாற்றப்பட்டது கொடுமை எனவும் திராவிட கழகத்தின் வீரமணி கூறியுள்ளார். அண்ணாசாலை கிராண்ட் சதர்ன் டிராக் ரோடு என்றும் காமராஜர் சாலை கிராண்ட் நார்தன் டிரங்க் ரோடு என்றும் மாற்றப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் இழைக்கப்பட்ட அநீதியை அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோருக்கும் இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இதற்கு கடும் கண்டனமும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web