அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில ரயிலும் தனியார்மயமாக்கல்!!

தமிழகத்தில் விரைவில் தனியார் ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
railway

தற்போது நம் இந்திய திருநாட்டில் மூன்று விதமான போக்குவரத்து நடைமுறையில் உள்ளன. அதன்படி வான்வழிப் போக்குவரத்து கடல்வழி போக்குவரத்து தரைவழிப் போக்குவரத்து. இதில் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்துவது தரைவழிப் போக்குவரத்து,மிகவும் விரைவாகவும் வேகமாகவும் காணப்படுவது ரயில்வே போக்குவரத்து. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ரயில்வே போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு அதனை மறுத்திருந்தது. ஆனால் நம் தமிழகத்திலேயே விரைவில் தனியார் ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.TN

மேலும் இதற்காக சென்னையில் இருந்து 11 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை நிச்சயம் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனியார் ரயில் சேவைக்கு 10 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இம்மாத இறுதியில் ஒப்பந்தப் புள்ளிகளை திறக்க ரயில்வே திட்டம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி சென்னையிலிருந்து 11 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவை மதுரை கோவை திருச்சி திருநெல்வேலி கன்னியாகுமரி மும்பை செகந்திராபாத் டெல்லி வழித்தடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தனியார் ரயில் திட்ட மதிப்பானது 3221 கோடி என ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களுக்கான தனியார் ரயில் சேவைக்கு தாம்பரம் ரயில் நிலையம் முனையமாக செயல்படுமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும் தண்டையார்பேட்டை ரயில் நிலையம் தனியார் ரயில்களின் பராமரிப்புக்காக மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழகத்தில் தனியார் ரயில் சேவை இயங்குவது கண்முன்னே தெரியவந்துள்ளது.

From around the web