வரும் திங்களன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்க முடிவு: பள்ளிக்கல்வி கமிஷனர் அறிவிப்பு

தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போதும் திறக்கப்படும் என்ற விபரம் தெரியாமல் உள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் நிலை இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் ஒருசில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வரும் திங்களன்று அதாவது ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு
 

வரும் திங்களன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்க முடிவு: பள்ளிக்கல்வி கமிஷனர் அறிவிப்பு

தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போதும் திறக்கப்படும் என்ற விபரம் தெரியாமல் உள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் நிலை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் ஒருசில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வரும் திங்களன்று அதாவது ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கில் ஒரு விதியாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஆந்திராவில் பள்ளி கல்வி நிறுவனங்கள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தொடக்கப்பள்ளிகள் , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும் என்பது குறித்தும், பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் இதுவரை 18,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 232 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web