மனைவியின் நகையை விற்று பிரியாணி விநியோகம் செய்த இஸ்லாமிய தன்னார்வலர்!

கோவையில் மனைவியின் நகையை விற்று சாலையோர மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார் முகமது ரபீக்!
 
briyani

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு காலம் நிலவுகிறது. அதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாலையோர மக்கள், ஆதாரம் இன்றி இருக்கும் மக்கள், மனநலம் குன்றியோர் போன்றோர் ஊரடங்கு கால கட்டத்தில் உணவு இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவியாக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்றதை உதவி செய்து வருகிறது. மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.lockdown

இந்நிலையில் அனைவருக்கும் ஒரே எதிரியாக காணப்படுவது பசி என்றே கூறலாம். இந்த பசியானது அனைவரின் வாழ்விலும் எப்பொழுதாவது நடைபெறும் என்றே கூறலாம். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு நபர்களுக்கும் உணவின்றி தவிக்கின்றன. இந்நிலையில் தன்னார்வலர் ஒருவர் செய்த செயல் தமிழகம் முழுவதும் வைரலாக பரவி இருக்கிறது. அதன்படி அவர் பிரியாணி கடை நடத்தும் இஸ்லாமிய தோழர் அவர்.

மேலும் அவர் உணவு இன்றி  இருப்பவர்களுக்கு பிரியாணி விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரின் இந்த பிரியாணி வினியோகம் செய்ய பணப்பற்றாக்குறை இருந்தது. இந்நிலையில் முகமது ரபீக் தனது மனைவியின் நகைகளை விற்று ஊரடங்கு தவிப்பவர்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார். இச்சம்பவம் தமிழக மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பு பெற்றது.மேலும் அவை இஸ்லாமிய சமூகத்தால் பார்க்கப்பட்டு அனைவருக்கும் பகிரப்படுகிறது மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் மழை குவிந்து வருகிறது.

From around the web