10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மறுகூட்டல் கிடையாது என்பதால் புகார்களை எங்கு தெரிவிப்பது?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை வெளியானது என்பதும் மாணவர்கள் அந்தத் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்தப் பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று காலை 9.30 மணி முதல் tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிப்பெண் பட்டியலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமலேயே தேர்வு முடிவு வந்துள்ளது என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு
 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை வெளியானது என்பதும் மாணவர்கள் அந்தத் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தப் பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று காலை 9.30 மணி முதல் tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிப்பெண் பட்டியலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமலேயே தேர்வு முடிவு வந்துள்ளது என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் இந்தத் தேர்வில் மறுகூட்டல் என்பதற்கு இடமில்லை. ஆனாலும் மதிப்பெண்கள் குறித்த புகார்களை எங்கு தெரிவிக்க வேண்டும் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் இருந்தது. இதனை அடுத்து பள்ளிக் கல்வி இயக்ககம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மறுகூட்டல் கிடையாது என்பதால் அது தொடர்பான புகார்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மதிப்பெண்களில் சந்தேகம் இருப்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது

From around the web