ஒரு மணி நேரம் மழை! விவசாயிகள் மிகுந்த ஆனந்தம்! மக்கள் மகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!
 
ஒரு மணி நேரம் மழை! விவசாயிகள் மிகுந்த ஆனந்தம்! மக்கள் மகிழ்ச்சி!

மக்கள் அனைவருக்கும் கோடைகாலம் என்றால் முதலில் கூறுவது மே மாதத்தை தான். ஆனால் தமிழகத்தில் மே மாதம் தொடங்க இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்ப நிலையானது மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் வெப்ப நிலையானது காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த உஷ்ணத்தை உணர்கின்றனர். ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது.

rain

இதனால் மக்கள் மிகவும் எரிச்சல் உணர்கின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் இன்பமான தகவலை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது.இதனால் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் பல பகுதிகளில் நீர் நிலைகளும் அதிகரித்த நிலையில் ஒரு சில பகுதிகளில் கோடை வெப்ப நிலை  குறையபட்டது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் எரியோடு, அய்யலூர்  ஆகிய இடங்களில் அரை மணி நேரமாக மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஒரு மணி நேரமாக பலத்த சூறைக்காற்று மற்றும் இடியுடன் மழை பெய்ததால் ஆத்துமேடு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

From around the web