ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை ஈன்ற அமெரிக்க தாய்

கர்ப்பமானதே தெரியாமல் மூன்று குழந்தைகளை ஈன்ற அதிசய சம்பவம் அமெரிக்காவில் தெற்கு டகோட்டா மாகநத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு நிகழ்ந்துள்ளது. ஆஸ்டின் கில்ஸ் தம்பதிகளுக்கு கர்ப்பம் தரித்ததே தெரியாமல் ஒரே பிரவசத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளனர். டெனன் கில்ஸ்க்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. டெனன் கில்ஸ் சிறுநீரகத்தில் கல் காரணமாக வலி ஏற்படுகிறது என எண்ணியுள்ளார். கடந்த 10-ம் தேதி அடிவயிற்றில் திடீரென அதிக வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் ஆஸ்டின் கில்ஸ்
 
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை ஈன்ற அமெரிக்க தாய்

கர்ப்பமானதே தெரியாமல் மூன்று குழந்தைகளை ஈன்ற அதிசய சம்பவம் அமெரிக்காவில் தெற்கு டகோட்டா மாகநத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு நிகழ்ந்துள்ளது.

ஆஸ்டின் கில்ஸ் தம்பதிகளுக்கு கர்ப்பம் தரித்ததே தெரியாமல் ஒரே பிரவசத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளனர்.

டெனன் கில்ஸ்க்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. டெனன் கில்ஸ் சிறுநீரகத்தில் கல் காரணமாக வலி ஏற்படுகிறது என எண்ணியுள்ளார். கடந்த 10-ம் தேதி அடிவயிற்றில் திடீரென அதிக வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை ஈன்ற அமெரிக்க தாய்

மருத்துவமனையில் ஆஸ்டின் கில்ஸ் தம்பதியருக்கு காத்திருந்தது அதிர்ச்சியான அதிசயமான சம்பவம்.

டெனன் கில்ஸ் கருவுற்று உள்ளதாகவும் கருவுற்று 34 வாரம் ஆன நிலையில் இப்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மற்றொரு அதிசயமான விஷயம் என்னவென்றால் டெனன் கில்ஸ்க்கு ஒரே பிரவசத்தில் மூன்று குழந்தைகள். ஏற்கனெவே ஆஸ்டின் கில்ஸ் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்போது ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் டெனன் கில்ஸ். மூன்றில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளும் சுமார் 2 கிலோ எடை உள்ளது. மூன்று குழந்தைகளும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

.               

From around the web