பெய்ரூட் நிலைமை சென்னைக்கு வருமா? அதிர்ச்சி தகவல்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தால் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மூவாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் டன் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாகவும் அது பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்
 

பெய்ரூட் நிலைமை சென்னைக்கு வருமா? அதிர்ச்சி தகவல்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தால் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மூவாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் டன் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாகவும் அது பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த நிலையில் சென்னையிலும் அமோனியம் நைட்ரேட் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 740 மெட்ரிக் டன் அளவிற்கு அமோனியம் நைட்ரேட் சில ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

லெபனானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்திற்கு காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் சென்னை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

From around the web