லெபனான் போல் சென்னையில் விபத்து நேராது: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் பிடித்த தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது இந்த நிலையில் சென்னையிலும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சென்னையிலும் பெய்ரூட் போல் வெடிவிபத்து நடக்குமோ என்ற அச்சம் சென்னை மக்களிடையே இருந்தது இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதாகவும் லெபனான்
 

லெபனான் போல் சென்னையில் விபத்து நேராது: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் பிடித்த தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது

இந்த நிலையில் சென்னையிலும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சென்னையிலும் பெய்ரூட் போல் வெடிவிபத்து நடக்குமோ என்ற அச்சம் சென்னை மக்களிடையே இருந்தது

இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதாகவும் லெபனான் போல் சென்னையில் வெடி விபத்து நடக்காது என்றும் தெரிவித்தனர்

சென்னை துறைமுகத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட் கரூர் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் மொத்தம் 740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் சென்னை மக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சென்னை மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web