அருள்வாக்கு கூறிய அமமுக வேட்பாளர்

தேர்தல் வந்துவிட்டாலே பல வித வித்தியாச செய்திகளுக்கும் சுவாரஸ்ய செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது. வித விதமான செய்திகள் தேர்தல் முடிந்து வரும் மே 23ல் ரிசல்ட் வரும் வரை கண்டிப்பாக இருக்கப்போகிறது. அது வரை சுவாரஸ்ய செய்திகளுக்கு குறைவு இருக்கப்போவதில்லை. இது போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் நெல்லை மாவட்டம் சிவகிரியில் நடந்துள்ளது. சிவகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தென்காசி தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், கோயிலில் சாமியாடி அருள்வாக்கு கூறினார். தென்காசி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய்
 

தேர்தல் வந்துவிட்டாலே பல வித வித்தியாச செய்திகளுக்கும் சுவாரஸ்ய செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது. வித விதமான செய்திகள் தேர்தல் முடிந்து வரும் மே 23ல் ரிசல்ட் வரும் வரை கண்டிப்பாக இருக்கப்போகிறது. அது வரை சுவாரஸ்ய செய்திகளுக்கு குறைவு இருக்கப்போவதில்லை.

அருள்வாக்கு கூறிய அமமுக வேட்பாளர்

இது போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் நெல்லை மாவட்டம் சிவகிரியில் நடந்துள்ளது.

சிவகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தென்காசி தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், கோயிலில் சாமியாடி அருள்வாக்கு கூறினார்.

தென்காசி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இத்தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி தேவிபட்டினம் பகுதிக்கு வாக்கு கேட்டு வந்த அவரை அப்பகுதி மக்கள் தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் சுவாமி கும்பிட அழைத்துச் சென்றனர். கோயிலுக்குள் சென்றதும் வேட்பாளர் பொன்னுத்தாய், திடீரென  அம்மன் அருள்வந்து, ‘ஆத்தா.. மகமாயி.. காளியம்மா..’’ என்று கூறியபடியே சாமியாடினார். அருகே இருந்த கட்சியினரும், பொதுமக்களும் அவரைப் பார்த்து பயபக்தியோடு வணங்கினர். சாமியாடியபடியே, அவர்கள் அனைவருக்கும் விபூதி பூசிவிட்டார் பொன்னுத்தாய்.

சிறிது நேரத்தில், அவர் இயல்புநிலைக்கு திரும்பினார். பிறகு, கோயிலில் இருந்து வெளியே வந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

From around the web